Advertisment

ரீலிஸ்க்கு முன்பே அடுத்த பட வாய்ப்பை வழங்கி இயக்குநரை நெகிழ வைத்த 'ஜெயம் ரவி'

'Jayam Ravi' who moved the director by giving him the next film opportunity before the release

Advertisment

நடிகர் ஜெயம் ரவி தற்போது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து 'ஜன கன மன' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்' போன்ற படங்களை இயக்கிய அஹ்மத் இயக்கியிருக்கிறார். டாப்ஸி, ரஹ்மான், அர்ஜுன் சர்ஜா மற்றும் நானா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்தின் படபிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இயக்குநர் அஹ்மத் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மீண்டும் நடிகர் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் ஜெயம் ரவியை டேக் செய்து, "நம்பிக்கை, அன்பு மற்றும் மரியாதையை வளர்க்கும் மனிதர்களை சந்திப்பது மிகவும் அரிது. அந்தவகையில் நீங்கள் சிறந்தவர். அனைத்துக்கும் நன்றி. இரண்டு படங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம். நம் பயணம் தொடரட்டும்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

jayam ravi
இதையும் படியுங்கள்
Subscribe