மணிரத்னம்இயக்கத்தில்விக்ரம்,கார்த்தி,ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பையும்வசூலைவாரிக் குவித்தும் வருகிறது பொன்னியின் செல்வன் படம். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளஇந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடையில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவிக்கு கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கரோனாதொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் அனைத்து வகையான கரோனாநெறிமுறைகளையும்பின்பற்றி என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபகாலமாகஎன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள்தேவைப்பட்டால் பரிசோதனை செய்து கொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறேன். முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.