/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/181_3.jpg)
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி அடுத்தாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் 'அகிலன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காமெடி படங்களுக்கு பெயர்போன இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இயக்குநர்ராஜேஷ்'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'கடவுள் இருக்கான் குமாரு', 'வணக்கம் டா மாப்ள' உள்ளிட்ட காமெடி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தில் பிரபலமானார். இவர்தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இப்படம் குறித்தஅடுத்தடுத்தஅறிவிப்புகள் விரைவில் வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)