Jayam ravi Spoke about Ponniyin selvan movie experience

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசைவெளியீடு பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த வாசகர்களைப் பற்றி சுவாரசியமான ஒரு தகவலைச் சொன்னார்.

நடிகர் ஜெயம் ரவி பேசியபோது “ரசிகர்களை நான் பிரித்துப் பார்த்து பேசவில்லை. ஆனாலும் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றி. ஒரு கதையை இரண்டு படமாக எடுத்து வைத்துவிட்டு முதலில் இதை பாருங்கள் பின்பு இதை காட்டுகிறேன் என்று சொன்னவர் தான் மணிரத்னம். கார்த்தி இல்லையென்றால் இந்த இரண்டு பாகத்தில் என்னால் முழுமையாக நடித்திருக்க முடியாது. தூரமாக இருந்து வாழ்த்தும் ரஜினி அவர்களுக்கு நன்றி, சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி.

பொன்னியின் செல்வன் படம் பார்க்க தியேட்டருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உடன் வந்தவர்களை எல்லாம் நான் பார்த்தேன். அந்த அளவுக்கு நாவலை வாசித்த வயதானவர்கள் எல்லாம் திரையரங்கம் வந்தார்கள்” என்று பெருமை பொங்க பேசினார்.