/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/385_8.jpg)
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், மற்றும் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஜெயம் ரவி, ஆண்டனி பாக்கியராஜ், சுஜாதா விஜயகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது ஜெயம் ரவி பேசுகையில், “நான் புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அந்த படம் ஹிட்டாகுது என்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி நான் வெறும் கருவியாக மட்டுமே இருக்கேன். ஒரு கார் மாதிரி. அதை ஒட்டுபவர்கள் தான் என்னை எடுத்து செல்கிறார்கள். அவ்வளவுதான் என்னுடைய உதவியே தவிர, இயக்குநரின் உழைப்பே ரொம்ப முக்கியம். ஆண்டனி பாக்கியராஜ் அவரது சொந்த உழைப்பால் வந்திருக்கிறார்.
இரண்டு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் இரண்டு கெட்டப்புடன் நடித்திருக்கிறேன். அதில் ஒன்று கிரே ஹேர் ஸ்டைல் கெட்டப். இந்த படம் எனக்கு ஒரு புது அனுபவம். அதை ரசித்து பண்ணியிருக்கேன். எமோஷன் அடங்கியிருக்கிற ஒரு குடும்ப படம் தான் இது. ஆனால், நடுவில் ஆக்ஷன், வெட்டு, குத்து என போயிட்டேன். இப்போ திருப்பி வந்துட்டேன். இந்த படத்தில் ஒரு அழகான தந்தை - மகள் பாசம் இருக்கிறது. அது தான் இந்த படத்தின் கரு” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)