Advertisment

”தமிழ் சினிமாவில் மட்டும்தான் இது நடக்கும்” - ஜெயம் ரவி பெருமிதம்

Jayam Ravi

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Advertisment

விழாவில் நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், “இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியை நடிக்கும் போதும், மக்கள் எப்படி இதை ரசிப்பார்கள் என யோசிப்போம். இன்று சில காட்சிகளை உங்களுக்கு காட்டி அதற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பை கண்ட போது, இந்த திரைப்படத்தில் நாங்கள் நடித்ததற்கான முழு சந்தோசம் கிடை்டீஹதது. தமிழ் சினிமாவில் மட்டும்தான் ஒரு நல்ல ஷாட்டிற்கு கூட வரவேற்பு கிடைக்கும். அவ்வளவு புத்திசாலித்தனமானவர்கள் நம் ரசிகர்கள். நமக்கு பிடித்த கார்த்தி, ரகுமான், ரவிவர்மன், பிரிந்தா மாஸ்டர் அனைவரும் ஒன்றாகி வந்துள்ள இந்த பாடல் சிறப்பாக உருவாகியுள்ளது. கார்த்தி எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இந்த படத்தில் இருந்தார். இந்த படத்தில் பல ஹீரோக்கள் உள்ளனர். திரையில் தெரியாத பல ஹீரோக்களும் உள்ளார்கள்.

Advertisment

மணிரத்னம் சாருக்கு இந்த படம் பலவருட கனவு. பலரால் முடியாததை சாதித்துள்ளார். லைகா சுபாஸ்கரண் இந்த படத்தின் திரைக்கு பின்னால் இருக்கும் ஹீரோ. அவர் இந்த படத்திற்கு பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளார். அடுத்ததாக ரவிவர்மன், தோட்ட தரணி சார் கடின உழைப்பை கொடுத்துள்ளனர். இது ரஹ்மான் சாருடன் எனக்கு முதல் படம் என்பது பெருமையாக இருக்கிறது. ஜெயராம் சாருடன் நடித்தது எனக்கு பெருமையான, மகிழ்ச்சியான அனுபவம். இந்த படம் பெரிய பாடத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது. படத்தில் பல ஆயிரம் பேர் உழைத்துள்ளனர். பொன்னியின் செல்வன் மக்களுக்காகவே எடுத்த படம். கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்" எனத் தெரிவித்தார்.

jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe