“கவலைப்படாதீங்க., கண்டெய்னர் கண்டெய்னரா பணம் எடுத்து கொடுப்போம்..” - ஜெயம் ரவி

jayam ravi speech at agilan press meet

கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அகிலன்'. இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க 'ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனால் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

அப்போது ஜெயம் ரவி பேசுகையில், "மேக்கிங் பொறுத்தவரை ஒரு கடினமான படம். கப்பல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் படப்பிடிப்பில் எதார்த்த சிக்கல்கள் நிறைய இருந்தது. கேப்டன் ஆஃப் ஷிப் எப்போதுமே இயக்குநராகத்தான் இருப்பார். ஆனால், படப்பிடிப்பில் தயாரிப்பாளர் கேப்டனாக இருந்தார். ஒரு கப்பலில் படப்பிடிப்பு நடந்தபோது கேப்டனாக அவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு நிறைய சிரமம் கொடுத்துவிட்டோம்.

நிறைய லோகேஷனில் படம் எடுக்க இருந்தது. அந்த இடத்துக்கெல்லாம் அனுமதியே கிடையாது. ஆனால், தயாரிப்பாளர் மனசு வைச்சு வாங்கினார். எந்த அளவுக்கு சிரமம் கொடுத்தோமென்றால்... கண்டெய்னர் கண்டெய்னரா சிரமம் கொடுத்தோம். ஆனால், கண்டெய்னர் கண்டெய்னராபணம் எடுத்து கொடுப்போம். கவலைப்படாதீங்க தயாரிப்பாளர்" என்றார். மேலும், படக்குழுவினர் அனைவரையும் பாராட்டிப் பேசினார்.

Agilan movie jayam ravi
இதையும் படியுங்கள்
Subscribe