jayam ravi siren movie trailer release

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இதில் சைரன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என முன்பு தகவல் வெளியானது. பின்பு திரையரங்குகளில் வெளியாவதை படக்குழு உறுதி செய்தது. இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்க ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். டீசரை பார்க்கையில் பரோலில் வெளிவந்த ஒரு கைதியை பற்றி சொல்வது போல் அமைந்திருந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், நடித்திருக்க, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் ஜெயம் ரவி, ஒரு சம்பவத்தால் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு போகிறார். அவர் எதற்காக போகிறார், விடுதலை ஆனாரா? இதற்கு பின்னால் நடந்தது என்பதை ஆக்‌ஷன், எமோஷன், காதல் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது. ட்ரைலரில் ஜெயம் ரவி பேசும், “எல்லா ஆம்பலைங்களுக்கும் ரெண்டு தேவதைங்க கிடைப்பாங்க. ஒன்னு நமக்காகவே பொறந்த தேவதை, இன்னொன்னு நமக்கே பொறந்த தேவதை, அவுங்க ரெண்டு பேருக்கு ஏதாவது ஒன்னுன்னா, நம்மளால தாங்கிக்கவே முடியாது...” என்ற வசனம் கவனம் பெறுகிறது. மேலும் யூடியூப்பில் இப்போது வரை 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி, ட்ரன்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது.