
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..
"இந்த இக்கட்டான கால கட்டத்திலும் என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய திரைத்துறை நண்பர்கள், மீடியா நண்பர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக common dp, video mashup, painting, motion poster, gana song, இன்னும் பல வழிகளில் வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு என் அளவில்லாத நன்றி. ரத்ததானம், காவலர்களுக்கு முகக்கவசம், இயலாதவர்களுக்கு உதவி போன்ற நற்செயல்களைச் செய்து அவர்களுக்கு நன்றியைத் தாண்டியும் பெரும் கடமைப்பட்டுள்ளேன். என் வேண்டுகோளுக்கிணங்க கூட்டம் சேராமல் தனி ஒருவனாக நின்று இவற்றையெல்லாம் செய்து உங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் அன்பில் திக்கு முக்காடிப் போனேன். இதற்கு என்ன கைமாறு செய்வேன் என அறியேன்!!! நல்ல படங்கள் மூலமாகத்தான் ரசிகர்களாக நீங்கள் கிடைத்தீர்கள். அதைத் தக்க வைப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன்" இவ்வாறு ஜெயம் ரவிகூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)