Advertisment

"நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்று தான்" - ஜெயம் ரவி வேண்டுகோள்!

vjgjg

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி செப்டம்பர் 10-ம் தேதி வரும் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்று மட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளைச் சிறப்படையச் செய்கிறது. ஆனால் இந்த வருடம் உலகளாவிய கரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை. கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ, அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவோம்" என கூறியுள்ளார்.

Advertisment

jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe