Advertisment

இரு வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி... எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் 'ஜே.ஆர் 28'

tanya ravichandran joining jr28 film

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி அடுத்தாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'பூலோகம்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நிமிர்ந்து நில், ஆதி பகவான் ஆகிய படங்களில் நடிகர் ஜெயம் ரவி இரு வேடங்களில் நடித்திருந்த குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஆக்ஷன் த்ரில்லர் காட்சிகளில்உருவாகும்இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே பிரியா பவானி சங்கர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் தற்போது மற்றோரு கதாநாயகியாகதன்யா ரவிச்சந்திரன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

jeyamravi jr28
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe