ADVERTISEMENT

‘காதலிக்க நேரமில்லை’ - ரொமான்ஸில் ஜெயம் ரவி

11:56 AM Nov 29, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. படு தோல்வியை படம் சந்தித்தது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் சைரன் படம் டிசம்பரில் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாக முன்பு தகவல் வெளியானது. மேலும் நித்யா மேனன் கதாநாயகியாக நடிப்பதாகவும் ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. தகவலில் கூறப்பட்டது போல அனைத்தும் தற்போது உறுதியாகியுள்ளது. போஸ்டரில் ஜெயம் ரவியும் நித்யா மேனனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. ரெட் ஜெயன்ட் தயாரிக்கிறது ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT