அந்தோணி பாக்யராஜ் இயக்கும் 'சைரன்', அஹமத் இயக்கும் 'இறைவன்', ராஜேஷ் இயக்கும் பெயரிடாத ஒரு படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெயம் ரவி. மேலும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படம், அதை முடித்துவிட்டு ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 'இறைவன்' படம் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நிலையில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை படக்குழு ஒரு போஸ்டர் மூலம் தெரிவித்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.