அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவியின் 24ஆவது படமான இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jayam-ravi_2.jpg)
இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாசி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை பற்றியும் அதனால் இவ்வுலகில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இப்படம் பேசுகிறதாம்.
இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படமான சாஹோ படமும் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us