Advertisment

பெண்களுக்கு முன்னுரிமை வழங்கிய ஜெயம் ரவி

Jayam Ravi gave priority to women in Kadhalikka Neramillai movie

Advertisment

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. படு தோல்வியை படம் சந்தித்தது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் சைரன் படம் டிசம்பரில் ரிலீஸாகவுள்ளது.

இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாகத்தகவல் வெளியான நிலையில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. போஸ்டரில் ஜெயம் ரவியும் நித்யா மேனனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. ரெட் ஜெயன்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் யோகி பாபு, வினய், லால், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

போஸ்டரில், நித்யா மேனன் பெயர் முதலில் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகுதான் ஜெயம் ரவி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இப்படத்தில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் கலைஞர்கள் அதிக பேர் வேலை பார்ப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்துள்ளதாக படக்குழு தரப்பு தெரிவித்துள்ளது.

Nithya menon kiruthiga udhayanidhi jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe