மீண்டும் பிரபலத்துடன் கூட்டணி அமைக்கும் ஜெயம் ரவி

Jayam Ravi to form alliance with harris jayaraj again

நடிகர் ஜெயம் ரவி தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து 'ஜன கன மன', 'அகிலன்' என்ற படத்தில் நடிக்கிறார். பின்பு இயக்குநர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். இதனிடையே மீண்டும் 'ஜன கன மன' படத்தை இயக்கிய அஹ்மத் இயக்கும் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். 'இறைவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் 'இறைவன்' படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாகவும், இது தொடர்பாக ஹாரிஸ் ஜெயராஜிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான 'தாம் தூம்' மற்றும் 'எங்கேயும் காதல்' படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

harris jayaraj jayam ravi
இதையும் படியுங்கள்
Subscribe