/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/128_26.jpg)
சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்தவர் ராஜா (வயது 33). சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ராஜாவின் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜா வீட்டுக்குச் சென்று, ராஜாவின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார். மேலும் ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளர்.
Follow Us