Advertisment

அடுத்தடுத்து அதிரடியாக 3 படங்களில் ஜெயம் ரவி !

jayam

மாஸ் படங்களில் நடித்து கைதட்டல் மற்றும் விசில்களை பெறும் அதே நேரத்தில் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் இந்த வளர்ச்சி ஒரு புறம் இருக்க, அவர் தயாரிப்பாளர்கள் மிகவும் விரும்பும் நடிகராகவும் மாறியுள்ளார். இதற்கு உதாரணமாக ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் 3 திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்திருக்கிறது. மேலும் இதுகுறித்து ஜெயம் ரவி கூறும்போது... "நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் பேரார்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் உண்மையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு வரம். தமிழ் சினிமாவின் என் நண்பர்கள் யாராவது இந்த மாதிரி 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். நான் கவனித்த வகையில் இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களை கண்டு நான் வியந்திருக்கிறேன்.

Advertisment

அவர்கள் நல்ல கதையம்சம் உள்ள படங்களை வெளியிடுவது மற்றும் அதை மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்ப்பது வரை மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், இவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாக உள்ளேன். நிச்சயமாக, ஆக்கப்பூர்வமான, வித்தியாசமான கதைகளுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த திரைப்பட இயக்குனர்கள் இல்லையெனில் இது சாத்தியமில்லை. அவர்களின் நீண்ட பயணத்தின் ஒரு அங்கமாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்காக ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் அனைவருக்கும் நான் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் பல மடங்கு பலனை திருப்பி தரும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார். மேலும் தற்போது படங்களை பற்றிய விவாதம் நடந்து வருவதாகவும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

Advertisment

jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe