சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்.எம், தொடர் தோல்வி படங்கள் கொடுத்து வந்தார். தற்போது அவர், ஜெயம் ரவியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். ஸ்கிரீன் சீன் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்க மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிரதர் (Brother)’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில், பூமிகா, விடிவி கணேஷ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவர இருக்கும் இப்படத்தின் பாடலை ‘திங் மியூசிக்’ ஆடியோ உரிமையை வாங்கியிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதில், திருமண வரவேற்பில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் சேர்ந்து பாடலை பாடி கொண்டாடி வருவது போல் இடம்பெற்றியிருந்தது. சில நொடிகளில் மட்டுமே வரும் அந்தப்பாடலில் ஹம்மிங் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று முனுமுனுக்க செய்தது.
இந்த நிலையில், படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ‘ஜீ தமிழ்’ நிறுவனம் வாங்கியிருப்பதாக ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் வரும் காட்சிகள் மூலம், இயக்குநர் ராஜேஷ்.எம் மீண்டும் கம் பேக் கொடுப்பார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.