Advertisment

“அப்படி பார்க்காதீங்க... எனக்கு கூச்சமா இருக்கு... ” - ஜெயம் ரவியின் ‘பிரதர்’ அப்டேட் 

jayam ravi brother audio launch update

ஜெயம் ரவி நடிப்பில் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பிரதர்’. இப்படத்தை ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்கீரின் சீன் மீடியா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன், எம்.எஸ்.பாஸ்கர், நட்ராஜ் சுப்ரமணியம், சரண்யா பொன்வண்ணன், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’ பாடலை பால் டப்பா என்பவர் எழுதி பாடியுள்ளார். இப்பாடல் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் தற்போது ‘பிரதர்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஜெயம் ரவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் படம் தொடர்பான சிறிய வீடியோ ஒன்றயும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisment

அந்த வீடியோவில், “எல்லோரும் நான் சாப்பிடும்போது அப்படி பார்க்காதீங்க... எனக்கு ஒரு மாதிரி கூச்சமா இருக்கு...” என ஜெயம் ரவி கலகலப்பாக நடித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அத்துடன் செப்டம்பர் 21ஆம் தேதி ‘பிரதர்’படத்தின் இசை வெளியீட்டுடன் டீசர் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது.

brother jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe