
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் பூமி. இந்த படம் அவருடைய நடிப்பில் 25வது படமாகும்.
‘ரோமியோ ஜூலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லக்ஷ்மனன் தான் இப்படத்தையும் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாகி வரும் நிதி அகர்வால் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், சதீஷ், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இப்படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ‘தமிழனென்று சொல்லடா’ எனும் பாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி, நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளன்று இப்பாடல் வெளியிடப்பட உள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.