இயக்குனர் லக்ஷ்மணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பூமி'. இது நடிகர் ஜெயம் ரவிக்கு 25-ஆவது படமாகும். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
கடந்த மே 1-ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவர, அப்படத்தின் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமார் திட்டமிட்டார். கரோனா நெருக்கடி காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. ஊரடங்கும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், படத்தை ஓடிடி-யில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.பின்னர், ஏற்பட்ட நீண்ட இழுபறியையடுத்து, படம் 'டிஸ்னி ஹாட்ஸ்டார்' ஓடிடி தளத்தில் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.
இதனையடுத்து, பூமி படத்தின் டிரைலரானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விறுவிறுப்பு காட்சிகள்மிகுந்த இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/iGiBmwQm7Uo.jpg?itok=2EyjQxbW","video_url":"