வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெற்றி பெற்றுள்ள படம் “கோமாளி”. ஜெயம் ரவி - காஜல் அகர்வால் கூட்டணியில் உருவான இப்படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் ஜெயம் ரவி பேசியபோது...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_4612.jpg)
"இன்றைய நாள் கோமாளியின் வேலை முடிவடையும் நாள். நல்ல படம் கொடுத்தால் நீங்கள் கொண்டாடுவீர்கள், பாராட்டுவீர்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. இந்த வெற்றி நிறைவை தந்திருக்கிறது. தனி ஒருவனில் வராத டயலாக் ஒன்று இருந்தது. நேர்மையாய் இருப்பது என்பது நமது கடமை, அது சாதனை ஆகாது. நாம் நல்லவனாக இருக்க வேண்டியது கடமை. நான் மகிழ்ச்சியாக வேலை செய்வதால் தான் வெற்றி தேடி வருகிறது. செய்யும் வேலையை சந்தோஷத்தோடு செய்தால் போதும். படத்தில் வேலை பார்த்தவர்கள் எல்லோரும் நன்றாக செய்துள்ளார்கள். ரிச்சர்ட் ரொம்ப ரொம்ப நல்லவர். ஹிப்ஹாப் ஆதி என் கேரியரில் இரண்டு பெரிய வெற்றி தந்திருக்கிறார்.
என் வெற்றியை கொண்டாடியவர். நான் நிறைய புதிதாக முயற்சிக்கிறேன் அதை ஆதரவு தந்து ரசிப்பது ஆடியன்ஸ் தான். அவர்களால் தான் வித்தியாசமான படம் செய்கிறேன். இந்தப்படத்தில் யோகிபாபு தான் வேண்டுமென்று நான்தான் சொன்னேன். அவர் மிகச்சிறந்த நண்பராகிவிட்டார். அவரை வைத்து நான் படம் இயக்க வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கிறேன். பார்ப்போம். சக்தி உண்மையாக இருக்கும் ஒரு நபர். ஐசரி கணேஷ் எனது அண்ணன் போன்றவர் நமக்கு தெரியாமல் நிறைய நல்ல விஷயங்கள் செய்து கொண்டே இருப்பவர். இந்த விழா உங்களுக்கு நன்றி சொல்லும் விழா இந்தப்படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)