jayam ravi is acting under vels production for pan india movie

ஜெயம் ரவி, 'அகிலன்' படத்தை தொடர்ந்து தற்போது 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதனிடையே அஹமத் இயக்கும் 'இறைவன்' படத்தில் நடித்துள்ளார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 28 ஆம் தேதி (28.04.2023) வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரோமோஷனில் படு பிசியாக படக்குழுஇறங்கியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவலை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜெயம் ரவி நடிக்கும் ஒரு படத்தை தயாரித்து வருகிறோம். இப்படம் அவருடைய கரியரில் பெரிய பட்ஜெட் படம். இதில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்." என்றார். இப்படம் பான்இந்தியா படமாக இருக்கும் எனவும் 18 மொழிகளில் வெளியாக படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர், கதாநாயகி குறித்தமற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் 'போகன்' மற்றும் 'கோமாளி' படத்தை ஐசரி கணேஷ் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.