ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 26 படத்தில் பாலிவு புகழ் தாப்ஸி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தற்போது ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கோமாளி’. இப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும். காஜல் அகர்வால் முதன் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடிக்கிறார். இது ஜெயம் ரவிக்கு 24வது படம் ஆகும்.
ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து இரு படங்கள் இயக்கிய லட்சுமண் தான் 25வது படத்தை இயக்குகிறார். இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 26வது படத்தை அஹமது இயக்குகிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியவர் இவர். இந்தப் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக தாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார்.
தாப்ஸி சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கான வாய்ப்பு தமிழ் சினிமாவில் பெரிதளவில் இல்லை. ஆனால், பாலிவுட்டில் அவர் நடிப்பில் வெளியான பிங்க் படத்திற்கு பின் தனக்கென ஒரு இடத்தை பாலிவுட்டில் வைத்திருக்கிறார் தாப்ஸி. சமீபத்தில்கூட தாப்ஸி, அமிதாப் பச்சனுடன் நடித்து வெளியான ‘பத்ளா’திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.