Advertisment

ஜெயம் ரவி + காஜல் அகர்வால் + கே.எஸ்.ரவிக்குமார் = ?

jayam ravi

'டிக் டிக் டிக்' பட வெற்றிக்கு பிறகு தற்போது 'அடங்க மறு' படத்தில் நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பததாக சமீபத்தில் அறிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் ஒன்று வெளியாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், ஜெயம் ரவி - காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி காலை பூஜையுடன் தொடங்கியது. மேலும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் நடிகர் ஜெயம் ரவி குறித்து பேசியபோது....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாருடனும் என் உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவர் நல்ல மனிதராக, நல்ல நடிகராக உருவானதை நேரடியாக பார்த்து வந்திருக்கிறேன். அவர் எப்போதுமே வழக்கமான சினிமாக்களை விட்டு விட்டு, புதிய முயற்சிகளையே மேற்கொள்பவர். ஒரு கதையோடு நீங்கள் வரும்போதே, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்ற உடனடி உள்ளுணர்வு தோன்றும். இயக்குனர் என்னிடம் கதையை சொல்லியவுடன், ரவிவை விட யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் சொல்வதை விட, படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் இதை உணர்ந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe