Advertisment

“விஜயகாந்த் செய்ததை நடிகர் சங்கத்திலும் தொடர்வோம்” - ஜெயம் ரவி உறுதி

jayam ravi about vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Advertisment

இந்த நிலையில் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஜெயம் ரவி அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லாரும் நல்லாருக்க வேண்டும் என நினைக்கிற உள்ளம் கொண்டவர். நிறைய நல்ல விஷயங்கள் பண்ணியிருக்கார். நடிகர் சங்கம் மட்டுமல்லதெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாருக்கும் அவ்வளவு உதவிகள். அவர் நம்மிடம் இப்போது இல்லை என நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது.அவர் செய்த நல்ல விஷங்களை அவர் குடும்பத்தினர் இன்னும் தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதை நடிகர் சங்கத்திலும் கண்டிப்பாக பண்ணுவோம் என்று உறுதி ஏற்றுக்கொள்கிறோம்.

Advertisment

எங்க அப்பாவும் அவரும் ரொம்ப காலமாக நெருங்கிய நண்பர்கள். நாங்க குழந்தையாக இருக்கும் போது , அவர் மாதிரி வரணும்னு சொல்லிட்டே இருப்பார். நான் நடிக்க வந்த புதிதில் என்னை நிறைய ஊக்கப்படுத்தியிருக்கிறார். சண்டை பற்றி அறிவுரையும் வழங்கினார். நாம எல்லாம் ஒரே ஊர்க்காரவங்கஎன்று சொல்வார். அதெல்லாம் என்னுடைய பசுமையான நினைவுகள். நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் வைத்தால் ரொம்ப சந்தோஷம்தான். அதுதான் நியாயமாகவும் இருக்கும். இது பற்றி எல்லாரும் பேசி முடிவெடுப்போம்” என்றார்.

jayam ravi vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe