jayam ravi about vijay

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர்மற்றும் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது.

Advertisment

இந்த நிலையில் இன்று (16.02.2024) திரையரங்குகளில் சைரன் படம் வெளியாகியுள்ளது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜெயம் ரவி சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களது பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவரிடம் நடிகர்கள் அரசியலுக்கு தொடர்ந்து வருகிறார்கள், நீங்க வருவீங்களா என்ற கேள்விக்கு, “நமக்கு அந்த எண்ணம் இல்லை” என்றார்.

Advertisment

பின்பு அவரிடம் விஜய் இடத்தை எந்த நடிகர் நிரப்புவார்கள் என்ற கேள்விக்கு, “அவர் இடத்தை யாருமே நிரப்ப முடியாது” என்றார். அரசியலில் விஜய்க்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, “என்னுடைய வட்டம் சினிமா தான்” எனப் பதிலளித்தார்.