Advertisment

"மணிரத்னம் இயக்கிய படங்களில் ‘இருவர்’ தான் பிடிக்கும். ஆனால்..." - மனம் திறந்த ஜெயம் ரவி

jayam ravi about maniratnam

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் கடந்த 6 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் 'அக நக...', 'வீரா ராஜ வீர...', 'சிவோஹம்...', 'பொன்னியின் செல்வன் ஆந்தம்' ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோக்களும்வெளியாகியுள்ளது.

ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் ப்ரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு. அந்த வகையில் கோவையில் நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜெயம் ரவி, "மணிரத்னத்தின் நாயகன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசை. மணிரத்னம் இயக்கிய படத்தில் இருவர் படம் தான் எனக்கு பிடிக்கும். ஆனால், எந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டால் நான் நாயகன் படத்தைத் தான் சொல்வேன். ஏனென்றால் மணி சார் இருவர் படத்தை உருவாக்கினார். ஆனால் நாயகன்படம் மணி சாரை உருவாக்கியது" என்றார்.

jayam ravi maniratnam Ponniyin Selvan 2
இதையும் படியுங்கள்
Subscribe