Advertisment

கவின் பட இயக்குநருடன் ஜெயம் ரவி கூட்டணி

jayam ravi 34 to directed by dada movie director ganesh k babu

Advertisment

ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை, அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் காதலிக்க நேரமில்லை படம் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜீனி படம் படப்பிடிப்பில் இருக்கிறது. பிரதர் படம் வருகிற திபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கவின் நடிப்பில் வெளியான டாடா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகும் இந்தப் படம் ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் தயாராகிறது. இந்த நிறுவனம் தயாரிப்பில் அகிலன், பிரதர் என இரண்டு படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இதையடுத்து மூன்றாவது முறையாக தனது 34வது படம் மூலம் நடிக்கவுள்ளார்.

இந்தப் படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தாம் தூம், எங்கேயும் காதல், பிரதர் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் இரண்டு கெட்டப்புகளில் இருக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe