Advertisment

நடிகை சாவித்திரி வழியில் ஜெயலலிதா...

jayalalitha

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திரையுலகில் தற்போது வாழ்க்கை வரலாற்று படங்கள் சீசன் உச்சத்தில் உள்ளது. சில்க் ஸ்மிதாவின் 'டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் ரிலீசான நடிகை சாவித்திரியின் 'நடிகையர் திலகம்' படம் வரை இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இயக்குனர்கள் பாரதிராஜா, மற்றும் விஜய் ஆகியோர் இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தயாரித்து, இயக்கவுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் பிரியதர்ஷினி இயக்கவுள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு இன்று ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போஸ்ட்டரில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் விரைவில் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘சக்தி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

mahanadhi nadigaiyarthilagam keerthysuresh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe