Advertisment

jawan set new record in pre bookings

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜவான்'. ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில்நாளை (07.09.2023) வெளியாகவுள்ளது. இதையொட்டி ஷாருக்கான், நயன்தாரா அவர்களது குடும்பத்துடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் மேற்கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்திற்கான ப்ரீ புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் மட்டும் 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்று ரூ. 20 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு இந்தியில் பாகுபலி - 2 திரைப்படம்6.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்று முதல் இடத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் நிலையில் தற்போது ஜவான் அந்த சாதனையை முறியடித்துள்ளதாகத்தெரிகிறது.