விஜய்யை வைத்து தொடர் ஹிட்படங்களைகொடுத்த அட்லீ தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும், முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸுக்கு பிறகானஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜீரோ கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு எந்த படமும் வெளியாகவில்லை. ஆனாலும்கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து ஷாருக்கான் நடிப்பில் வெளியாகவுள்ள ஜவான் படத்தின் ஓடிடி உரிமையை 120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.