Advertisment

jawan first single released

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜவான்'. முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாகி பலரது கவனத்தையும்பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'வந்த இடம்' பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலைத்தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே அனிருத் பாடியுள்ளார். பாடலைப் பார்க்கையில், ஷாருக்கான் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் பாடல்போல அமைந்துள்ளது. மேலும் அனிருத்தின் துள்ளலான இசை பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. ஷாருக்கானோடு பிரியாமணியும் இதில் நடனமாடுகிறார். இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விவேக் எழுதியுள்ள 'வரும்போதே தெரியனும் .. வர்ர சிங்கம் யாரு', 'ராஜாதி ராஜனை பொடுசு அறியாது', 'நா செஞ்ச சம்பவம் தனி வரலாறு...' உள்ளிட்ட வரிகள் ஷாருக்கான் கதாபாத்திரத்தை விவரிக்கிறது.