kangana ranaaut

Advertisment

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே சுஷாந்த் சிங்கின் மரணத்தை தொடர்ந்து பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அதேபோல மஹாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா கட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நடிகை கங்கனா மீது கவிஞர் ஜாவேத் அக்தர் அந்தேரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்திருக்கிறார்.

ஒரு பேட்டியில் கங்கனா கவிஞர் ஜாவேத் பற்றி பேசும்போது, “அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்கு தொடர்ப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனாமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது”மேலும், இந்த வழக்குதொடர்பாக எந்ததகவலையும் அவரது வழக்கறிஞரான நிரஞ்சன் தெரிவிக்க மறுத்துவிட்டார்.இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 3 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.