Advertisment

பா.ம.க. கௌரவத் தலைவர் இல்ல திருமண விழாவில் விஜய்யின் மகன்

jason sanjay in pmk gk mani house wedding ceremony

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், பொதுவெளியில் பெரும்பாலும் கலந்து கொள்ளாத நிலையில் தற்போது பா.ம.க. கௌரவ தலைவர் ஜி.கே.மணி இல்லத் திருமண நிகழ்வுக்கு வருகை தந்துள்ளார்.

Advertisment

சேலத்தில் பா.ம.க. கௌரவ தலைவர் ஜி.கே.மணி மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் சேதுநாயக், திருமணம் நாளை(26.02.2025) மெய்யனூர் சூரமங்கலத்தில் நடக்கிறது. இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் இந்த விழாவில் திரைப் பிரபலங்கள் விஜய் சேதுபதி, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொள்வதற்காக சேலம் வருகை தந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜி.கே.மணியின் மகனான தமிழ் குமரன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின்(லைகா)தலைமை பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி லைகா தயாரித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Salem pmk jason sanjay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe