jason sanjay movie crew wishes movie hero sundeep kishan birthday

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை லைகா தயாரிக்க தமன் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் இன்று பிறந்தநாள் காண்பதால் அவரை வாழ்த்தி படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளிட்ட சில காட்சிகள் படமாக்கப்படுவது இடம் பெற்றுள்ளது. மேலும் சந்தீப் கிஷனின் 31வது படமாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

ஜேசன் சஞ்சையின் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் லைகா நிறுவனத்துக்கு சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்கள் அமைந்து வந்ததால் இப்படத்தை அவர்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹீரோயின், வில்லன் உள்ளிட்ட எந்த நடிகர்களின் அப்டேட்டுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment