jason momo

Advertisment

பிரபல நாவலை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் நடிப்பதற்காக இணையும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள். பிரபல ஆங்கில வெப் தொடரான 'கேம் ஆஃப் த்ரோன்ஸி'ல் டிரியன் லேனிஸ்டர் கதாபாத்திரத்தில் பீட்டர் டின்க்லேஜ் மற்றும் கால் டிராகோ கதாபாத்திரத்தில் ஜாஸன் மோமோ நடித்திருந்தனர்.

இவ்விருவரும் தற்போது இணைந்து “தி குட், தி பேட் அண்ட் தி அன்டெட்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வேம்பயர்களை வேட்டையாடும் ஒருவனுக்கும், ஒரு வேம்பயருக்கும் இடையில் ஏற்படும் நட்பை அடிப்படையாகக் கொண்டது ‘குட் பேட் அண்ட் & அன்டெட்’ நாவல். இதில் வேம்பயர்களை வேட்டையாடுபவராக பீட்டர் டின்க்லேஜும், வேம்பயராக ஜாஸன் மோமோவும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை லெஜண்ட்ரி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.