vgesg

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'பரதேசி' உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபலத் தயாரிப்பு நிறுவனம் ஜே.எஸ்.கே ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஜே.எஸ்.கே சதிஷ் குமார் தன் நிறுவனம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் தான் தயாரிக்கும் அடுத்த படத்துக்கான இயக்குனர் தேடல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"JSK FILM CORPORATION நிறுவனம் இன்று 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. புதிய சிந்தனை, புதிய கோணம், புதிய பாதை என்று தனித்தன்மையுடன் செயல்பட்டு வித்தியாசமான கதைகளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் - வெளியிட்டும் மக்களிடம் கொண்டு சேர்த்து 2 முறை பெருமைக்குரிய தேசிய விருதுகளையும், பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் பெற்று மக்களின் நல் ஆதரவோடு இந்நிறுவனம் 15-வது வருடத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.

10-க்கும் மேற்பட்ட புதிய இயக்குனர்களையும் 6-க்கும் மேற்பட்ட புதிய இசையமைப்பாளர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் நிறுவனத்திற்கு உண்டு. அதுமட்டுமில்லாமல் எங்கள் நிறுவனம் சொந்தமாக நடத்திவரும் Youtube சேனலில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் subscriber-களாக இணைந்துள்ளனர். JSK AUDIO என்ற ஆடியோ நிறுவனமும் சொந்தமாக தொடங்கப்பட்டு மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இத்தருணத்தில் நீண்ட நாட்களாக வெளியீட்டிற்காக காத்திருக்கும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படமும், அருண்விஜய் நடப்பில் ‘வா டீல்’ திரைப்படமும் வெகு விரைவில் வெளியாகும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisment

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இந்த ஆண்டு மேலும் இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்காக புதிய இயக்குனர்களிடம் கதைகளைக் கேட்பதற்குத் தயாராக உள்ளோம். புதிய இயக்குனர்கள் புதிய சிந்தனையுடன் வித்தியாசமான கதையம்சத்துடன் 9884318883 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், [email protected] என்ற இமெயில் ஐடி-யிலும் தொடர்பு கொள்ளலாம். எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகத் துறையினருக்கும், திரைப்படத் துறையினருக்கும் ரசிகபெருமக்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.