Advertisment

‘ஜப்பான்’ ரிலீஸ் தேதி அப்டேட்

japan release date update

கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழா வருகிற 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. கார்த்தியின் 25வது படம் என்பதால் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஆர். பிரபு, "ஜப்பான் படம் தீபாவளியை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாலை 6 மணி முதல் 9 மணி வரை திட்டமிட்டுள்ளோம். கார்த்தியின் 25வது படமென்பதால் அவரது திரைப் பயணத்தில் பயணித்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், அவரது குடும்பங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

Advertisment

தீபாவளி என்பதால் ரசிகர்களின் வரவேற்பு நன்றாக இருக்கும் எனஎதிர்பார்க்கிறோம். காலை 9 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகிறது. இந்த படம் ஒரு நகைச்சுவை கலந்த நக்கல் படமாக இருக்கும். அரசியல் படம் கிடையாது. குடும்பத்தோடு வந்து ஜாலியாக சிரித்து மகிழும்படி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும். அதற்குள் ராஜு முருகன் ஸ்டைலில் ஒரு சின்ன கருத்தும் இருக்கும். எல்லா அம்சங்களும் இருக்கும். ஆனால் முகம் சுளிக்கிற வன்முறை இருக்காது" என்றார்.

actor karthi Japan movie raju murugan sr prabhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe