Janhvi Kapoor post about Sridevi

திரைத்துறையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார்.

Advertisment

2018பிப்ரவரி 24 ஆம் தேதி மண்ணை விட்டு மறைந்தார். அவர் துபாயில் இருந்த போது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்ற சமயத்தில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாகச் சொல்லப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisment

ஸ்ரீதேவியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் வருகிற 24 ஆம் தேதி வரவுள்ள நிலையில், அவரது மகள்ஜான்வி கபூர் உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் இன்னும் எல்லா இடங்களிலும் உன்னைதேடுகிறேன் அம்மா.எது செய்தாலும் அது உங்களை பெருமைப்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் செய்கிறேன். எங்கு சென்றாலும்எதைசெய்தாலும்உங்களிடம் தொடங்கி உங்களிடமே முடிவடைகிறது" எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஜான்வி கபூர் தற்போது இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். விரைவில் தென்னிந்திய மொழிகளிலும் ஸ்ரீதேவி போல் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.