Advertisment

“இயக்குநரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன்” - ஜனனி

janani speech at hotspot success meet

Advertisment

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி, சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் ஜனனி பேசியதாவது, “ஒரு படம் பெரிய படமா?, சின்னப் படமா? என பாரபட்சம் காட்டாமல், படம் நன்றாக இருந்தால் பாராட்டி, அதை ஜெயிக்க வைக்க உங்கள் ஆதரவைத் தருகிறீர்கள், உங்களுக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷுக்கு நன்றி. கதை கேட்டதிலிருந்து ஷூட்டிங் வரை, அவரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன் ஆனால் பொறுமையாக இருந்து, என்னை நம்புங்கள் என ஆதரவு தந்து, இந்தப்படத்தை எடுத்தார். இந்தப்படத்தில் எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். இந்தப்படத்தை நல்லமுறையில் எடுத்துச் சென்ற தயாரிப்பாளர்களுக்கு நன்றி” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது, “இந்தப்படம் இந்த நிலையில் இருக்க மிக முக்கிய காரணம் நீங்கள் தான். பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிட்டி பரவிய பிறகு, பிரஸ் ஷோவின் போது, மிகப்பதட்டமாக இருந்தேன். ஆனால் நீங்கள் கைதட்டிப் பாராட்டியது உண்மையிலேயே மிக சந்தோசமாக இருந்தது. நல்ல படம் என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமானது. இன்னொரு வேண்டுகோள், திரையரங்கில் இப்போது படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வீக் டேஸில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான், அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள். ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்களுக்கே கூட்டம் வராது. இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம் நன்றி” என்றார். படக்குழுவினர் இதே தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஹாட்ஸ்பாட் 2 உருவாகவுள்ளதை இந்த வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

actress janani iyer
இதையும் படியுங்கள்
Subscribe