/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/289_6.jpg)
'திருச்சிற்றம்பலம்' பட வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் அரியவன். இதில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் நடிக்கின்றனர். எம்.ஜி.பி மாஸ் மீடியா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வழங்க டேனியல் பாலாஜி, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்த மாதம் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பலரும் கலந்துகொண்டு பேசினர்.
கதாசிரியர் மாரிச்செல்வன்.சு பேசியதாவது, "இப்படத்தில்வாய்ப்பளித்த எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்திற்கும், இயக்குநர் மித்ரன் R ஜவஹர் அவர்களுக்கும் நன்றி. நான் ஒரு கதையில் எந்த கருத்தும் சொல்லக்கூடாது, அட்வைஸ் பண்ணக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதியது தான் இந்தக் கதை.ஆனால் இந்தக் கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்பது தான் உண்மை. உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பெண்கள் மீதான வன்முறை இருந்து கொண்டே தான் இருக்கிறது அதை மாற்ற நம் மனங்கள் மாற வேண்டும். இந்தப் படம் அதைப் பற்றிப் பேசும்" என்றார்.
நடிகை காவ்யா பேசியதாவது, "நாம் நிறைய படங்கள் நடித்தாலும் சில படங்கள் தான் மனதுக்கு நெருக்கமாகமுக்கியமான படமாகத்தோன்றும். இந்தப் படம் அப்படிப்பட்ட படம்" என்றார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசியதாவது, "இப்படத்தில் இரண்டாவது பாடலை நான் இசையமைத்துள்ளேன். இந்தப் பாடல் உருவானதே ஒரு ஆச்சரியம் தான். நான் இருவரைப் பாட வைத்து ஒரு ரஃப் வெர்ஷனாக ஒரு பாடலை உருவாக்கி வைத்தேன். அது நண்பரிடத்தில் இருந்தது. அவர் இப்பாடலை ஒரு நல்ல படத்தில் பயன்படுத்தக் கேட்கிறார்கள் என்றார். யாரெனக் கேட்டேன். இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் என்றவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)