Advertisment

James Cameron takes us to the Avatar world - avatar 2 teaser released

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. 237 மில்லியன் டாலர் பொருட்செலவில் வெளியான இப்படம் 2.847 பில்லியன் டாலர் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருக்கும் இப்படத்தின் காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படத்தின் இரண்டாவது பாகமான 'அவதார் 2' படத்தை 2017-ல் தொடங்கிய படக்குழு கடந்த ஆண்டு படப்பிடிப்பு நிறைவு செய்தது. 'அவதார்2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கு 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடத்திற்கு மேலாக ஓடக்கூடிய இந்த டீசரில் படத்தின் தலைப்பை போலவே கடலில் அதிக காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் இந்த ஒன்றரை நிமிட டீசரிலேயேபார்ப்பவர்களை அவதார் உலகத்துக்கே கடத்தி செல்வது போல் இந்த டீசர் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படம் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க முதல் பாகமான 'அவதார்' படத்தை செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.