உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 16,500 ஆக அதிகரித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் கூட இந்த வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை, கரோனா வைரஸிலிருந்து மீண்டு வந்ததை மிகவும் உருக்கமாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ”காய்ச்சல் மற்றும் கடும் தலைவலியால் ஒரு வாரம் படுக்கையில் மிகவும் சிரமப்பட்டேன். இரண்டாவது வாரம் இருமலுடன் மிகவும் சோர்வாகக் காணப்பட்டேன். இரண்டாவது வார முடிவில் இருமல் மட்டும் தான். பகல் நேரத்தில் ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறேன். தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்டேன். என் மகனுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுகிறேன்” என்று அவருடைய இன்ஸ்டா பக்கத்தில்தெரிவித்துள்ளார்.