Advertisment

காரின் பதிவெண்ணிற்கு 34 லட்சங்களை செலவழித்த ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்!

aashik

சினிமாஎன்பதைபொழுதுபோக்கு அம்சமாகமட்டுமேபார்ப்பவர்களும்இருக்கிறார்கள். அதை மிகவும் நேசித்து, தனக்குப் பிடித்தசினிமாவிற்காகவும், சினிமாநட்சத்திரத்திற்காகவும் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அகமதாபாத்தைச் சேர்ந்தஆஷிக்படேல், இரண்டாவது வகை.

Advertisment

புகழ்பெற்றதுப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்டின்ரசிகரானஇவர், சமீபத்தில் 39.5 லட்சத்திற்கு விலையுயர்ந்த காரினைவாங்கியுள்ளார். காருக்குப் பதிவு எண் வாங்குவதற்கு, அகமதாபாத்தின்போக்குவரத்து அலுவலகத்தை தொடர்புகொண்ட இவர், ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண்ணைப் பதிவு எண்ணாகக் கேட்டுள்ளார். அது ஃபேன்சிஎண் என்பதால், ஏலம்விடப்பட்டுள்ளது. ஏலத்தில், '007' எண்ணுக்குத் தொடக்க விலையாக, 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, நடந்த ஏலத்தில், ஆஷிக்படேல்34 லட்சத்திற்கு, '007' எண்ணைவாங்கியுள்ளார். அவருக்கு,"ஜி.ஜே.01.டபிள்யூ.ஏ.007"என்ற பதிவு எண்ணை, அகமதாபாத் போக்குவரத்து அலுவலம்வழங்கியுள்ளது. இதைப்பற்றி ஆஷிக்கூறுகையில், "நான் என் முதல் காருக்கு '007' என்ற எண்ணைவாங்கியிருக்கிறேன், இது எனக்குமகிழ்ச்சியை அளிக்கிறது. இது பணத்தைப் பொறுத்ததுஅல்ல. இந்த எண்,எனக்குஅதிர்ஷ்டத்தை தரும்என்ற என் நம்பிக்கையைப் பொறுத்தது" எனக் கூறியுள்ளார். காரின்பதிவெண்ணிற்காக, 34 லட்சம் வரை ஒருவர் செலவு செய்துள்ளது, பலரையும்திகைப்படையச் செய்துள்ளது.

james bond
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe