
கடந்த வருடம் வெளியான திரைப்படம், 'ஜல்லிக்கட்டு'. 'மாவோயிஸ்ட்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய இப்படம், ஆஸ்கர் விருதுக்கு, இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடக்கவுள்ள ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த சர்வதேசப் படத்திற்கான விருதிற்கு, இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பாகப் போட்டியிட, இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு இப்படத்தை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.