Advertisment

“அந்தப் பாடலை தொடர்ச்சியாகக் கேட்க வைப்போம்”- போலீஸின் விநோத தண்டனை!

கடந்த2009 அபிஷேக்மற்றும் சோனம் கபூர்ஆகியோர்நடிப்பில் வெளியானபடம் 'டெல்லி6'. இந்தப் படத்தைஓம் பிரகாஷ்இயக்கஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இசை ஆல்பம் செம ஹிட் அடிக்க, மசக்கலிஎன்ற பாடல் ஹிந்தி பேசாதவர்களிடமும் ஹிட் அடித்தது.

Advertisment

jaipur

இந்நிலையில் இந்தப் படத்திலுள்ள பிரபல பாடலானமசக்கலிபாடலை ரீமேக் செய்து வெளியிட்டது டி-சீரிஸ். இந்த வீடியோவில் சித்தார்த் மல்ஹோத்ராவும் தாரா சுதாரியாவும் நடித்துள்ளனர்.

Advertisment

மசக்கலிபாடலைரீமேக் செய்து அதை கேவலப்படுத்திவிட்டார்கள், இந்த வெர்சன் ரிலீஸ் செய்யாமலே இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகிறது. இதனால்ட்விட்டரில் மசக்கலி2.0 என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டானது.

இந்தப் பாடலின் மூலம் ஏ.ஆர். ரஹ்மான்மிகவும் வேதனையில் இருப்பதாகஅவரின்ட்விட்டர் பதிவுதெளிவுப்படுத்தியது. ரஹ்மானின் ரசிகர்களும் அந்தப் பாடலை சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வர, ஜெய்பூர் போலீஸ் ஒருபடி மேலே சென்று அந்தப் பாடலைகேட்க வைத்து தண்டனையாகவழங்கி வருகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது வெளியே நடமாடுபவர்களுக்கு இந்தியா முழுவதும் போலீஸார் விதவிதமான விசித்திரமான தண்டனைகளை வழங்கி வரும் நிலையில் மசக்கலி 2 ரீமீக்ஸ் பாடலை தொடர்ந்து கேட்க வைப்பது மிகப்பெரிய தண்டனைதான் என்று இணையவாசிகள் சமூக வலைதளத்தில்அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

corona virus jaipur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe