Jailer win; Gold coins for 300 people

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Advertisment

ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து காசோலை அளித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பரிசாக இரண்டு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார். ரஜினியை தொடர்ந்து நெல்சனை சந்தித்த கலாநிதி மாறன், அவருக்கும் காசோலை வழங்கி போர்ச் (Porsche) கார் ஒன்றை பரிசளித்தார். தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்து அவருக்கு காசோலை வழங்கி மகிழ்ந்தார். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் பணியாற்றிய படக்குழுவை சேர்ந்த 300 பேருக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்கக்காசு வழங்கியுள்ளது.

Advertisment