Skip to main content

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் முன்னணி நடிகை ; ஜெயிலர் படத்தின் கதாநாயகி அப்டேட்

 

jailer update tamannaah is heroine for rajini

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

 

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்தக் கதாபாத்திரத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கன்னடத்தில் முன்னணி நடிகரான சிவராஜ் குமார் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் நடிப்பது தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை ரஜினி படங்களுக்கு இல்லாத ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இப்படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மீதம் உள்ள படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் நடித்து வருவதாக படக்குழு அறிவித்தது. 

 

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தமன்னா இப்படத்தில் நடிப்பதாகத் தெரிவித்து, படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. முதல் முறையாக ரஜினியுடன் தமன்னா நடிக்கிறார். விரைவில் அடுத்தடுத்து அப்டேட்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.